தேசிய குழந்தைத் தொழிலாளர் முறை அகற்றும் திட்டமும், ஸ்ரீ ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கலை அறி வியல் கல்லூரி சமூகப் பணிஇயல் துறையும் இணைந்து அன்னூரில் கல்வி விழிப்புணர்வு விளை யாட்டுப் போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா குமரன்நகர் பூங்காவில் நடைபெற்றது. விழாவிற்கு வருகை தந்தவர்களை சமூக பணித்துறை மாணவர் சிவராசு வரவேற்றார். சமூக ஆர்வலர் வெங்கடாஜலபதி முன்னிலை வகித்தார்.
விழாவில் அன்னூர் பேரூராட்சி மன்ற தலைவர் இரா.பரமேஸ்வரன் கலந்து கொண்டு பேசும் போது, அனைத்து பள்ளிகளிலும் தற்போது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. தேர்வு முடிந்தவுடன் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு பல்வேறு விளை யாட்டுகளில் பங்கேற்கச் செய்வதன் மூலம் அவர்களின் திறன்களை வளர்த்துக்கொள்ள முடியும்.
விடுமுறையை பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள முடியும். இதைத் தவிர்த்து பெற் றோர்கள் வேலைக்கு செல்லும் இடங்களுக்கு குழந்தைகளை எக் காரணம் கொண்டும் செல்லக்கூடாது.
அவ்வாறு அழைத்துச் செல்கிறபோது குழந்தைகளும் சின்னச் சின்ன வேலைகளை கற் றுக்கொண்டு குழந்தை தொழிலாளர்களாக மாற வாய்ப்புள்ளது இதனைத் தவிர்த்திட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சிகள்
12-வார்டு கவுன்சிலர் சிற்பி ரங்கநாதன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் K.C.Kவிஜயகுமார் ,மருத் துவர் கே.கல்யாண சுப்பி ரமணியம் ஆகியார் வாழ்த்துரை வழங்கினர். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கி தேசிய குழந்தை தொழிலாளர் முறையை அகற்றும் திட்டத்தின் இயக்குனர் டி.வி.விஜயகுமார் பேசும்போது, கோவை மாவட்டத்தில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் அவர்களின் உத்தரவுப்படி குழந்தை தொழிலாளர் முற்றிலும் இல்லாத பேரூராட்சிகளை உருவாக்கும் நோக்கத் தோடு இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும் என தெரிவித்தார்.
நிறைவாக ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முதலாம் ஆண்டு சமூகப் பணித்துறை மாணவர் பிரவீன் நன்றி கூறினார். விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெரியோர்கள் கலந்து கொண்டு சிறப் பித்தனர்.



