fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் 37வது ஆண்டு விளையாட்டு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் 37வது ஆண்டு விளையாட்டு விழா

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 37வது ஆண்டு விளையாட்டு விழா, கல்லூரி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் சிவக்குமார் தலைமை வகித்தார்.

விளையாட்டுச் செயலர் மற்றும் எம்.பி.ஏ முதலாமாண்டு மாணவர் குகன் வரவேற்றுப் பேசினார். உடற்கல்வி இயக்குநர் சரவணன் விளையாட்டுத்துறையில் மாணவர்கள் படைத்த சாதனைகளைப்பட்டியலிட்டார்.
பாரதியார் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை பேராசிரியர் அண்ணாதுரை சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுக் கோப்பைகள் வழங்கிப் பாராட்டினார்.

இதில், மாணவர்கள் பிரிவு விளையாட்டுப் போட்டிகளில் 37 புள்ளிகள் பெற்று பி.பி.ஏ துறையும், மாணவிகள் பிரிவு விளையாட்டுப்போட்டிகளில் 44 புள்ளிகள் பெற்று பி.காம். சி.எம்.ஏ துறையும் முதலிடம் பிடித்தன. மாணவர்கள் மற்றும் மாணவிகள் பிரிவில் 63 புள்ளிகள் பெற்று பி.பி.ஏ துறை ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

படிக்க வேண்டும்

spot_img