fbpx
Homeபிற செய்திகள்‘இளைஞர்களுக்கு இலக்குகளில் தெளிவு இருப்பது அவசியம்’ விஷ்வ வித்யாவீடம் பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தல்

‘இளைஞர்களுக்கு இலக்குகளில் தெளிவு இருப்பது அவசியம்’ விஷ்வ வித்யாவீடம் பட்டமளிப்பு விழாவில் அறிவுறுத்தல்

அம்ரிதா விஷ்வ வித்யாபீடம், என்ஐஆர் எஃப் 2023 ல் இந்தியாவில் உள்ள முதல் 10 யூனிவர்சிட்டிகளுக்கான ரேங்கிங்கில் இடம்பிடித்தது. அவர்களுடைய சென்னை வளாகத்தில் அதன் 2023 பட்டமளிப்பு விழாவின்போது 32 மாணவிகள் உள்பட 176 மாணவர்களுக்கு பட்டங் கள் வழங்கப்பட்டன.

தலைமை விருந்தினர் பேராசிரியர் பி.எஸ்.மூர்த்தி (இயக்குநர், ஐஐடி ஹைதராபாத்) பேசியதாவது: உங்களது இலக்குகளில் தெளிவு இருப்பது மிகவும் இன்றியமையாதது.

கோல் போஸ்ட் இல்லாமல் கால்பந்தாட்டம் விளை யாடுவதும், இலக்கில் தெளிவில்லாமல் இருப்பதும் ஒன்றுதான். எதை நீங்கள் குறிவைக்கிறீர்கள், எந்த இலக்கை நோக்கி பயணிக்கிறீர்கள் என்று கண்டிப்பாக அறிந்திருக்க வேண்டும். உங்களது கோல் போஸ்ட்டை தொடக்க நிலையிலேயே அடையாளம் காண்பது, சரியான திசையில் உங் களை வழிநடத்தும் என்றார்.

கௌரவ விருந்தினர், டாக்டர் ஹனுமந்த் ராவ் (இயக்குநர் ஜென்ரல், சமீர் மெய்ட்டியின் ஆர் ஆண்டு டி, இந்திய அரசாங்கம்) கூறியதாவது:
கட்டுப்பாடுகளில் இருந்து நீங்கள் புதிதாக கண் டறிந்திருக்கிற சுதந்திரத்தை உற்சாகத்தோடு அனுபவியுங்கள்.

உங்களது பட்டத்தை நீங்கள் பெற்றி ருக்கிறீர்கள். ஆனால் இதுவொரு தொடக்கம் மட் டுமே. உங்களது சொந்த விதியை கட்டமைக்கும் கலைஞர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். நமது தேசத்திற்கு சிறந்த பங் களிப்பை வழங்கும் கடமைப்பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது என்றார்.

அம்ரிதா விஸ்வா வித்யபீடத்தின் வேந்தர் மாதா அம்ரிதானந்தமயி, மெய்நிகர் முறையில் ஆற் றிய உரையில், ‘‘புத்தக அறிவோடு சேர்த்து அனுப வத்திலிருந்து பெறப்படும் அறிவை பயன்படுத்துங்கள். வேலைவாய்ப்பு சந்தையில் நீங்கள் கால்பதிக்கும்போது பொறுமையும், விடாமுயற் சியும் உங்களை வழிநடத்தட்டும்.

நீங்கள் மேற் கொள்ளும் முயற்சிகள் பலன் தருவதற்கு சரியான சுயமுயற்சியும் மற்றும் கடவுளின் அருளும், அந்நடவடிக்கைகளுக்கு தேவைப்படும் என்றார்.
சுவாமி ராமக்ரிஷ் னானந்த் பூரி (நிர்வாக போர்டு, அம்ரித விஷ்வ வித்யாபீடம்) கூறியதாவது:

புதிய அத்தியாயத்தை தொடங்கும்போது கடும் உழைப்பு மிக முக்கியமானதாக இருப் பினும், உங்களது கட்டுப் பாட்டை கடந்து எண்ணற்ற விஷயங்கள் மாறு படக்கூடியதாக இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

வாழ்க்கையின் பயணத் தோடு இது ஒன்றிணைந்தது என்பதால், இந்த நிச்சயமற்ற தன்மையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றார். அம்ரிதா விஷ்வ வித்யபீடத்தின் பொறியியல் பள்ளியின் டீன் டாக்டர் சசாங்கன் இராமநாதன், அம்ரிதா ஸ்கூல் ஆஃப் இன்ஜினியரிங் – கம்ப்யூட்டிங் – சென்னையின் முதல்வர் டாக்டர் வி. ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசினர். அறிவியல் மற்றும் மானுடவியல் துறையின் தலைவர் டாக்டர் வினதா சாய் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img