fbpx
Homeபிற செய்திகள்கொங்கு கல்வி நிலைய பள்ளியில் அறிவியல் கண்காட்சி

கொங்கு கல்வி நிலைய பள்ளியில் அறிவியல் கண்காட்சி

ஈரோடு ரங்கம்பாளையம் கொங்கு கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் மாணவர்களின் அறிவியல் கண்காட்சி இரண்டு நாட்கள் நடைபெற்றது. கண்காட்சியை பள்ளியின் தாளாளர் செல்வராஜ், பள்ளியின் முதல்வர் நதியா அரவிந்தன் ஆகி யோர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.

இந்த கண்காட்சி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க் கவும், மாணவர்கள் மத்தியில் அறிவியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்கப்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் மாணவர்களை அறிவி யல் மேதையாக உருவாக் குவதற்கும் வாய்ப்பாக அமைந்ததாகவும், இந்த கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சான்றிதழ்களும், சிறந்த படைப்புகளை உரு வாக்கிய மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும் வழங் கப்பட உள்ளதாகவும் பள்ளியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்த கண்காட்சியில் பள்ளியின் மாணவ-மாணவிகள், பெற்றோர், ஆசிரியை, ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img