ஆறுகுட்டி நினைவு அறக்கட்டளையின் சார்பில் சிறுமுகையில் இயங்கி வரும் ஸ்ரீஅம்பாள் பப்ளிக் பள்ளியில் எதிர்காலத்தில் பெறப்போகும் பட்டங்களுக்கு ஆதாரமாக குழந்தைகளிடம் மறைந்துள்ள தனித்திறமைகளை வெளிக்கொண்டு வந்து அவர்களை ஊக்குவிக்கும் வகையில் மழலையருக்கான பட்டமளிப்பு விழா கொண்டாடப்பட்டது.
விழாவினை பள்ளியின் தாளாளர் பழனிச்சாமி தலைமை தாங்கி துவக்கி வைத்தார். பள்ளியின் செயலாளர் கீதா, முதல்வர் சித்ராஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மழலையர் வகுப்பில் பயிலும் மழலை இயாத் மற்றும் ஹம்சத் ஆகியோர் 28 மாநிலங்களின் பெயர்களையும் அவற்றின் தலைநகரங்களையும் கூறினர்.
இந்தியா புக் ஆப் ரிகார்ட்ஸ்
மழலை சதன்சந்துருதன் 118 தனிம வரிசை அட்டவணையைக் கூறி தன் திறமைகளை வெளிக் கொண்டு வந்தார். இம்மாணவன் இதற்கு முன்பு தேசிய அளவில் இந்தியா புக் ஆப் ரிகார்ட்ஸ்-ல் இந்த சாதனையை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விழாவின் சிறப்பு விருந்தினராக டாக்டர் காந்தியாயனி கலந்து கொண்டார். மேலும் அவர் தமிழ்வழியில் படித்து மருத்துவராக சமூகத்தில் உயர்ந்து விளங்குவதையும் ஒழுக்கத்தை கடைப்பிடித்து நடந்தால் வாழ்வில் முன்னேறலாம் என்பதை எடுத்துக்கூறியும் குழந்தைகளுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.



