கோவை நவக்கரை பகுதியில் உள்ள ஏ.ஜே.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் நவீன கால தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் பி.சி.ஏ கணினி பயன்பாட்டியல் மிகைப்படுத்தப்பட்ட காட்சி / மெய் நிகர் காட்சி துறை (ஆக்மென்டட் ரியாலிட்டி (ஏஆர்) விர்ச்சுவல் ரியாலிட்டி (விஆர்) என புதிய படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதில் மாணவர்கள் தங்களது கூடுதல் திறன்களை வளர்த்தி கொள்ளும் விதமாக ஏ.ஆர் மற்றும் வி.ஆர் சார்ந்த உபகரணங்களை கொண்ட எக்ஸ்பீரியன்ஸ் மையமும் துவங்கப்பட்டது. முன்னதாக நடைபெற்ற இதன் துவக்க விழாவில் கல்லூரி முதல்வர் முனைவர் ராஜூ அனைவரையும் வரவேற்று பேசினார்.
கல்லூரியின் செயலர் பேராசிரியர் அஜீத் குமார் லால் மோகன் விழாவிற்கு தலைமை வகித்து உரை ஆற்றினார். விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக, டெலாய்ட் நிறுவனத்தின் சைபர் ரிஸ்க் ஆலோசகர் வேந்தன்,கேப்ஜெமினி நிறுவனத்தின் சைபர் பாதுகாப்பு மேலாளர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில், கல்லூரியின் துணை முதல்வர், டீன்,துறை தலைவர்கள்,பேராசிரியர்கள்,ஊழியர்கள்,மாணவ,மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்