கோவை அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில், பெருந்தலைவர் காமராஜர் திட்டத்தின் கீழ் ரூ.9.22 கோடி மதிப்பீட்டில் புதி தாக கட்டப்பட்டுள்ள முதலாம் ஆண்டு அறி வியல், செயற்கை நுண்ண றிவு மற்றும் தரவு அறிவி யல் கட்டடத்தை, முதல மைச்சர் ஜோசப் விஜய் சென்னை தலைமைச் செய லகத்திலிருந்து காணொலி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.
கோவையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத் குமார் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி, புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களை பார்வை யிட்டார்.

ரூ.9.22 கோடியில் 2,919.21 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட் டுள்ள இந்தக் கட்டடத்தில், தரைத்தளத்தில் 4 வகுப்பறைகள், 4 ஆய்வ கங்களும், முதல் தளத்தில் 6 வகுப்பறைகள், ஒரு ஆய்வகம் மற்றும் 2 வரைப்பட அறைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர், அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ஜெகதீசன், பொதுப்பணித்துறை செயற் பொறியாளர்
திருநாவுக் கரசு, ஆசிரியர்கள், மாண வர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



