தி வீக் – ஹன்சா ரிசர்ச் நடத்திய 2026-ம் ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகள் ஆய்வில், கோவையின் நம்பர் 1 பல்துறை மருத்துவமனையாக கேஎம்சிஹெச் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 9-வது ஆண்டாக இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
புதுடெல்லியில் நடந்த விழாவில், கேஎம்சிஹெச் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ஜெ.சிவகுமரன், தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் கே.ஜி.அருண்ராஜிடம் விருதைப் பெற்றார். மருத்துவர்களின் திறமை, உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி, புதுமைகள், நோயாளிகளுக்கான சேவை உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இது குறித்து மருத்துவமனை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி மகிழ்ச்சி தெரிவித்தார்.



