ASFASM (தமிழ்நாடு சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சங்கம்) சார்பில், சங்கத்தின் தலைவர் டாக்டர் அஜித் குமார் லால் மோகன், செயலாளர் டி.சேதுபதி, பொருளாளர் டாக்டர் நித்யானந்தம், புரவலர், டாக்டர் நந்தினி ரங்கசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர் முகமது அலி ஆகியோர் முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்தனர்.
இச்சந்திப்பின்போது, பிற மாநிலங்களில் மேற்கொள்ளப்பட் டுள்ள முன்னெடுப்புகளைப் பின் பற்றி, தமிழ்நாட்டில் சுயநிதிக் கல்வி நிறுவனங்களின் பங்களிப்புடன் பிரவுன்ஃபீல்டு பல்கலைக்கழகம் (Brownfield University) நிறுவிட வேண்டுமென வலியுறுத்தினர்.
மேலும், மாநிலத்தின் உயர்கல்வித் துறையை வலுப்படுத்துதல், அதன் தரத்தையும் வளர்ச்சியையும் மேம்படுத்துதல் மற்றும் சுயநிதிக் கல்லூரிகளின் முன்னேற்றத்திற்குத் தேவையான பல்வேறு முக்கியப் பரிந்துரைகள் மற்றும் கோரிக்கைகள் அடங்கிய விரிவான மனுவையும் முதலமைச்சரிடம் வழங்கினர்.



