தமிழ்நாடு அரசு பொங்கல் மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதா ரர்கள் மற்றும் முதியோர் ஓய்வூதியதாரர்களுக்கு இலவச வேட்டி மற்றும் சேலைகளை வழங்கி வருகிறது.
புதிய தரம், புதிய வண்ணம்,புதிய திடத்தில் 1 கோடியே 77 லட்சத்து 64 ஆயிரம் தங்க மற்றும் வெள்ளி நிற காப்பர் ஜரிகை கொண்ட சேலைகள், 1 கோடியே 77 லட்சத்து 22 ஆயிரம் சலவை செய்யப்ப ட்ட வேட்டிகள் கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்ய கடந்த ஜூலை முதல் நாள் அரசாணை வெளியிட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வேட்டி உற்பத்தியும், அக்டோபர் ஒரு மாதம் முதல் வாரத்தில் சேலை உற்பத்தியும் துவங்க ப்பட்டது.
கடந்தாண்டு இலவச வேட்டி சேலை உற்பத்தி ஜூன் மாதம் தொடங்கி டிசம்பர் 25ம் தேதி மொத்த உற்பத்தியும் முடிக்கப்பட்டது. நடப்பாண்டு கடந்த செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் வேஷ்டி உற்பத்திக்கும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் நெசவாளர்கள் உற்பத்தி செய்ய நூல் கொடுக்கப்பட்டு ரீட், பிக், அகல ம் மாற்றப்பட்டு புதிய வடிவில், புதிய திடத்தில் வேஷ்டி சேலை உற்பத்தி திட்டம் தற்போது சீரும் சிறப்பாக விறுவிறு ப்பாக நடைபெற்று கொண்டுள்ளது.
15, 000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகளில் வேட்டி சேலை முழு உற்பத்தி செய்ய ஆறு மாதங்கள் தேவைப்படுகிறது. தற்போது அரசு டிசம்பர் 15ஆம் தேதி காலக்கெடு நிர்ணயம் உற்பத்தியை செய்தால் செய்து நிறைவு மட்டுமே பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
ஆனால் பொங்கல் பண்டிகைக்குள் இலவச வேட்டி சேலை 60 முதல் 70 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்து முடிக்கும் சூழல் உள்ளது. புதிய ரகம், புதிய திடத்தில் சேலை மற்றும் சலவை செய்யப்பட்ட வேஷ்டிகளை புதுமையாக உற்பத்தி செய்த அரசு கொடுத்துள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பொறுத்திருந்து வேட்டி சேலைகளை அனைவரும் பெற்றுக் கொள்வார்கள்.
கடந்த காலங்களில் உற்பத்தி காலதாமதம் ஏற்படும் பொழுது அரசு ஜனவரி மாதத்தில் கிராமப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கும் பிப்ரவரி மாதத்தில் நகர்புறத்தில் உள்ள பொது மக்களுக்கும் இலவச வேட்டி சேலைகளை ரேஷன் கடைகள் கொடுக்கப்பட்டது. மூலம்
முதற்கட்டமாக உற்பத்தி சேலைகளை ஜனவரி மாதம் கிராமப்புற பகுதிகளிலும் அதனைத் தொடர்ந்து பிப்ரவரி மாதம் நகர்ப்புற பகுதியிலும் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
மேலும் 2.11.2026 பொதுமக்களுக்கு கொடுப்பதற்காக கூடுதல் உற்பத்தியாக வேஷ்டி மற்றும் சேலைகள் 10 லட்சம் உற்பத்தி செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆதலால் டிசம்பர் 15 என்ற உற்பத்தி நிறைவு காலக்கெடுவை நெசவாளர்களுக்கு ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி இரண்டாம் வாரம் வரை உற்பத்தி செய்ய காலக்கெடு ஏற்படுத்திக் கொடுத்து கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் தொடர் வேலைவாய்ப்பையும் மேம்படுத்தி அவர்களின் வாழ்வாதாரத்தையும் அவர்கள் சார்ந்த நேர்முக மற்றும் மறைமுக தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கவும் இலவச வேட்டி சேலை உற்பத்தி செய்ய காலக்கெடு வழங்கியும், இலவச வேட்டி சேலை’ அனைத்தும் கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் முழு உற்பத்தி முடிக்க தமிழ்நாடு முதல்வர் காலக்கெடு வழங்கி ஆணை பிறப்பிக்க வேண்டும் என ஈரோடு நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



