வீடற்றோருக்கான தங்குமிடத்தில் வசிக்கும் ஏழைகள் 100 பேருக்கு தீபாவளியை முன்னிட்டு கனரா வங்கி அதிகாரிகள் சங்கம் புத்தாடைகள் வழங்கியது.

கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தின் (CBOA) கோவை அணியினர், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள கோவை மாநகராட்சியின் வீடற்றோருக்கான தங்குமிடத்தில் வசிக்கும் ஏழை மக்களுடன் தீபாவளி பண்டிகையைக் கொண்டாடினர்.
சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் மற்றும் மதுரை வட்டத் தொடர்பாளர் சுந்தரராஜன் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடந்த இந்நிகழ்ச்சியில் அங்கு தங்கியுள்ள 100 பேருக்குப் புத்தாடைகள் வழங்கப்பட்டன.

தீபாவளி என்பது விளக்குகளை ஏற்றுவது மட்டுமல்ல; மனிதர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதும் ஆகும் என்ற கருத்தை மையமாகக் கொண்டு வீடற்றோருக்கும் புத்தாடை வழங்கி பண்டிகையின் மகிழ்ச்சியைக் கொண்டு சேர்க்கும் நோக்கில் கனரா வங்கி அதிகாரிகள் சங்கத்தினர் இந்த நிகழ்ச்சியை நடத்தியது பாராட்டுக்குரியதாக அமைந்தது.



