Homeபிற செய்திகள்கோவையில் ஊழலுக்கு எதிராக இந்தியன் வங்கி நடைபயணம்

கோவையில் ஊழலுக்கு எதிராக இந்தியன் வங்கி நடைபயணம்

விஜிலன்ஸ் விழிப்புணர்வு வாரத்தை Vigilance Awareness Week) முன்னிட்டு, நேர்மை, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நிர்வாகம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கோவை கொடிசியா அருகே இந்தியன் வங்கி ஒரு நடைபயணப் பேர ணியை ஏற்பாடு செய்தது.

“செழிப்புக்கான நேர்மை” (Probity for Prosperity) என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நடைபயணத்தை வங்கியின் கள பொது மேலாளர் எம்.செல் வராஜ் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். வங்கி யின் மண்டல மேலாளர் எம்.ராஜேஷ் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்வில் வங்கி யின் உயர் அதிகாரிகள் மற் றும் பணியாளர்கள் கலந்து கொண்ட னர். இந்த நடைபயணத்தில் பங் கேற்றவர்கள் விழிப்புணர்வு வாச கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி, முழக்கங்களை எழுப்பிய படி சென்றனர்.

“ஊழலுக்கு எதிராக நடப் போம்; சிறந்த பொருளாதாரம் மற்றும் தூய்மையான நிர்வாகத் திற்காக நடப்போம்” என்ற நோக்கத்துடன் நடந்த இந்த நடைபயணமானது, அறநெறி சார்ந்த வங்கிச் செயல்பாடு, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழலற்ற இந்தியா ஆகியவற்றை உருவாக்குவதில் வங்கி கொண்டுள்ள உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையிலும், அன்றாட வாழ்வில் நேர்மையைக் கடைப்பிடிக்குமாறு குடிமக்களை ஊக்குவிக்கும் வகையிலும் அமைந்திருந்தது.

படிக்க வேண்டும்

spot_img