விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் தானிய ஈட்டுக்கடன் வழங்கியதுடன், மின்னணு கிடங்கு ரசீது முறையை முறையாகச் செயல்படுத்தியதற்காக, கோவை மாவட்டம் நரசீபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இந்திய அளவில் சிறந்த சங்கமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேசிய சேமிப்புக் கிடங்குகள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையம் சார்பில், டெல்லியில் உள்ள அதன் அலுவலகத்தில் அக். 26ல் நடைபெற்ற விழாவில் விருது வழங்கப்பட்டது. விருதை சங்கச் செயலாளர் நடராஜ், கோவை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அ.அழகிரியிடம் சமர்ப்பித்து வாழ்த்து பெற்றார்.



