பேங்க் ஆஃப் இந்தியாவின் கோவை மண்டல அலுவலகம் ஊழல் விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் புளியமரத்து கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த முகாமில் அறநெறி சார்ந்த நிர்வாகம், செயல்பாட்டு வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நடைமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



