Homeபிற செய்திகள்சுவர் ஓவியம் மூலம் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு

சுவர் ஓவியம் மூலம் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு

ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில், போலியோ ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், சிந்தாமணி பெட்ரோல் பங்க் எதிரில் சுவர் ஓவியம் வரையும் நிகழ்ச்சி நடந்தது.

இதனை ரோட்டரி மாவட்ட ஆளுநர் மாருதி ஆர்.எஸ்., தொடங்கி வைத்தார். ஓவியம் மூலம் போலியோ தடுப்பு, தடுப்பூசியின் அவசியம் மற்றும் போலியோ இல்லாத உலகை உருவாக்குவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பொது இடத்தில் வரையப்பட்ட இந்த ஓவியம், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்தது. கலை மூலம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் இந்த முயற்சியை மேற்கொண்டது.

படிக்க வேண்டும்

spot_img