Homeபிற செய்திகள்நீலகிரி வரையாடு தின ஓவியப் போட்டியில் ஈரோடு மாணவி வெற்றி

நீலகிரி வரையாடு தின ஓவியப் போட்டியில் ஈரோடு மாணவி வெற்றி

நீலகிரி வரையாடு தினத்தையொட்டி தமிழ் நாடு வனத்துறை நடத்திய ஓவியப் போட்டியில், ஈரோடு குமலன்குட்டை அரசு மேல்நிலைப் பள்ளி 11-ஆம் வகுப்பு மாணவி வி.ஜான்சி ஆண்ட்ரியா பரிசு பெற்றார்.


தமிழகத்தின் மாநில விலங்கான நீலகிரி வரை யாட்டைப் பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை மாணவர்களிடையே ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் அக்டோ பர் 7-ஆம் தேதி நீலகிரி வரையாடு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
இதையொட்டி தமிழகம் முழுவதும் 6 முதல் 8-ஆம் வகுப்பு, 9 முதல் 12-ஆம் வகுப்பு என இரு பிரிவுகளில் ஓவியப் போட்டிகள் நடத் தப்பட்டன. இதில் மூத்தோர் பிரிவில் ஜான்சி ஆண்ட்ரியா வெற்றி பெற்றார்.


வெற்றி பெற்ற மாணவர் களுக்கான பரிசளிப்பு விழா அக்டோபர் 7-ஆம் தேதி பொள்ளாச்சி அரசு கலைக் கல்லூரியில் நடை பெற்றது. நீலகிரி வரையாடு பாதுகாப்பு குறித்து இளம் தலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் போட்டிகள் நடத் தப்பட்டதாக வனத்துறை தெரிவித்துள்ளது.

படிக்க வேண்டும்

spot_img