பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்ட தினத்தையொட்டி, பொள்ளாச்சி சி.சுப்பிரமணியம் வளாகத்தில் உள்ள காமராஜர், வி.கே.பழனிசாமி கவுண்டர், சி.சுப்பிரமணியம், நா.மகாலிங்கம் ஆகியோரின் சிலைகளுக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து அமைச்சர் கூறுகையில், “1961 அக்., 7ல் தொடங்கப்பட்ட பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தின் முக்கியத்துவத்தையும், இதற்காக பாடுபட்ட தலைவர்களின் பங்களிப்பையும் இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ள வேண்டும்,” என்றார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பவன்குமார் க.கிரியப்பனவர், எம்.எல்.ஏ., கே.நித்தியானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள், விவசாயிகள் பங்கேற்றனர்.
வால்பாறை சோலையாறு அணையில் உள்ள முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் பத்மபூஷன் டாக்டர் கே.எல்.ராவ் சிலைக்கும் அதிகாரிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



