Homeபிற செய்திகள்தூத்துக்குடியில் 2,433 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67.30 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் அலிம்கோ நிறுவனம் தாராளம்

தூத்துக்குடியில் 2,433 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.67.30 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் அலிம்கோ நிறுவனம் தாராளம்

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் அலிம்கோ நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியில் இருந்து ரூ.67 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பில் 2,433 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு காது கேட்கும் கருவிகள், சக்கர நாற்காலிகள், மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர வாகனங்கள், ஸ்மார்ட் மொபைல்கள், ஊன்று கோல்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினரும், திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி ராஜாத்தி கருணாநிதி எம்பி வழங்கினார்.
உடன், முன்னாள் அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளருமான கீதா ஜீவன், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் குரு சந்திரன், அலிம்கோ பொது மேலாளர் அசோக்குமார் மாற்றுத்திறனாளிகள் அலுவலர் காமாட்சி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img