Homeபிற செய்திகள்ரீடு நிறுவன வெள்ளி விழா: சத்தியில் ரத்ததான முகாம்

ரீடு நிறுவன வெள்ளி விழா: சத்தியில் ரத்ததான முகாம்

ரீடு நிறுவனத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவையொட்டி சத்திய மங்கலம் அரசு அண்ணா மருத்து வமனையில் ரத்த தான முகாம் நடைபெற்றது.
ரீடு நிறுவனம், அரசு அண்ணா மருத்துவமனை மற்றும் சத்தியமங்கலம் இன்னர் வீல் கிளப்பின் ஷி ரோஸ் மகளிர் சங்கம் ஆகியவை இணைந்து முகாமை நடத்தின.
முகாமில் ரீடு நிறுவனப் பணியாளர்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் பங்கேற்று, ரத்த அழுத்தம், ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ரத்ததானம் செய்தனர்.
ரீடு நிறுவன இயக்குநர் கருப்புசாமி, சத்தியமங்கலம் இன்னர் வீல் கிளப் ரோஸ், மகளிர் சங்கத் தலைவர் நித்தியா இறையன்பு, இயக்குநர் போஸ்கோ இறை யன்பு ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர்.
முகாமில் மொத்தம் 16 பேர் ரத்ததானம் செய்தனர். ரீடு நிறுவனத் திட்ட ஒருங்கிணைப்பாளர் அன்னக்கொடி முகாமை ஒருங்கிணைத்தார்.

படிக்க வேண்டும்

spot_img