வள்ளலார் கொள்கை பரப்பு மன்றம் சார்பில் 19-ம் ஆண்டு பெருநிலை பெருவிழா மாநாடு வடலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு வடலூர் டி.ஆர்.எம்.சாந்தி பர்னிச்சர் உரிமையாளரும், தொழிலதிபருமான ராஜமாரியப்பன் தலைமை தாங்கினார். ஞானாலயா வள்ளலார் கோட்டம் திருஞானானந்த சுவாமிகள் கலந்துகொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தார்.
விழாக் குழு தலைவர் ஆனந்தன், சன்மார்க்க சங்கத்தலைவர் பாரிவள்ளல், பள்ளி தலைமை ஆசிரியர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பா ளர்களாக விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. அருளரசு, ஜெயப்பிரியா குரூப்ஸ் நிறுவனர் ஜெய்சங்கர் ஆகி யோர் கலந்துகொண்டு பேசினர்.
மாநட்டில் அருட்பெருஞ்ஜோதி அகவல் ஓதுதல், சன் மார்க்க சொற்பொழிவு, பரத நாட்டியம், வில்லுப்பாட்டு, சன்மார்க்க பேருரை மற்றும் பேருபதேசம் வாசித்தல் ஆகிய நிகழ்வுகள் நடந்தன.
மேலும் மாநாட்டில் பங்கேற்ற பக்தர்கள் அனைவருக்கும் அன்ன தானம் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு மாநில வள்ளலார் பேரவை தலைவர் சுவாமி பத்மேந்திரா, வாசுதேவ நல்லூர் வள்ளலார் சன்மார்க்க பேரவை பண்டாரம் செந்தில்குமார், பேராசிரியர் வீரமுத்து, சிவராஜ், கண்ணபிரான் மற்றும் கல்லுக்குழி சன்மார்க்க அன்பர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மாநாடு அமைப்பாளரும், வள்ளலார் கொள்கை பரப்பு மன்ற தலைவருமான கண்ண தாசன் நன்றி கூறினார்.



