Homeபிற செய்திகள்ஈரோட்டில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடங்கியது

ஈரோட்டில் நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை கண்காட்சி தொடங்கியது

ஈரோடு பிரப் சாலையில் உள்ள ஈரோடு சர்வோதய சங்க ஷோரூமில் நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி மற்றும் விற்பனை நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.
ஈரோடு சர்வோதய சங்கத் தலைவர் சண்முகம், செயலர் ஜி.செல்வம், ஷோரூம் மேலாளர் லோகநாதன் ஆகியோர் கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

நவராத்திரி விழாவையொட்டி, திருச்சி மற்றும் புதுச்சேரியில் இருந்து வரவழைக்கப்பட்ட சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான கொலு பொம்மைகள் ஷோரூமில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
பாரம்பரிய கொலு பொம்மைகள் மற்றும் பல்வேறு அலங்காரப் பொம்மைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளதாக சர்வோதய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img