Homeபிற செய்திகள்இடையர்பாளையத்தில் கிராமசபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

இடையர்பாளையத்தில் கிராமசபை கூட்டம்: கலெக்டர் பங்கேற்பு

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சுல் தான்பேட்டை ஊராட்சி ஒன்றியம் இடையர் பாளையம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் பவன் குமார் க.கிரியப்பனவர் சிறப்பு பார்வையாளராக பங்கேற் றார்.
கூட்டத்தில் பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் அமைக்கப்பட் டிருந்த திட்ட விளக்க அரங்கு களை கலெக்டர் பார்வை யிட்டார்.
வேளாண் இயந்திரமயமாக்கல் திட்டத்தின் கீழ், ஒரு பயனாளிக்கு ரூ.14.06 லட்சம் மதிப்பிலான டிராக்டரை ரூ.6.50 லட்சம் மானியத்தில் வழங்கினார்.
மழைநீரை முறையாக சேமித்தல், குப்பைகளை வகைப்படுத்தி வழங்குதல், டெங்கு தடுப்பு நடவடிக் கைகளில் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் வலியுறுத்தினார். சீமைக் கருவேல மரங்களை அகற் றும் பணிகள் குறித்தும் விளக்கினார். கிராம ஊராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகம், ஜல் ஜீவன் திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தூய்மை மற்றும் எச்.ஐ.வி., எய்ட்ஸ் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img