Homeபிற செய்திகள்கோவை மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு 1800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சீர்வரிசை பொருட்கள் முதலமைச்சர்...

கோவை மாவட்டத்தில் சமுதாய வளைகாப்பு 1800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம், சீர்வரிசை பொருட்கள் முதலமைச்சர் விஜய்க்கு நெஞ்சார்ந்த நன்றி

குடும்பம் சுற்றத்தார் போல சமுதாய வளைகாப்பு நடத்தி, சீர்வரிசைப் பொருட்கள் மட்டுமல்லாமல் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கர்ப்பிணித் தாய்மார்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.

கர்ப்பிணித் தாய்மார்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, வளைகாப்பு செய்து, சீர்வரிசை பொருட்களை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு “நிறைந்த மனதுடன்” நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
“மக்களின் நலனை முதன்மையாகக் கொண்டு செயல்பட்டு வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், பதவியேற்ற நாள் முதல் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அறிவித்து, அதனை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக தமிழ்நாட்டில், பிறக்கும் குழந்தைகள் நல்ல உடல் நலத்துடனும், ஆரோக்கியமாகவும் பிறப்பதற்கு ஏதுவாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தி, அவர்களுக்கு கலவை சாதங்களை பரிமாறி, ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கோவை மாவட்டம், கணபதி, மணியகாரன்பாளையம், ஸ்ரீ கிருஷ்ண கவுண்டர் கல்யாண மண்டபத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில், கடந்த 25ம் தேதி அன்று நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், துவக்கி வைத்து, முதற்கட்டமாக செல்வபுரம், சாய்பாபா காலனி, கணபதி, தொண்டாமுத்தூர், சிங்காநல்லூர், ஆகிய பகுதிகளை சேர்ந்த 200 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சீர்வரிசைப் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்களை வழங்கி, கலவை சாதங்களை பரிமாறினார்.


மேலும், கிணத்துக்கடவு பகுதியிலும், 26.09.2026 அன்று காரமடை பகுதியிலும், 28.09.2026 அன்று சுல்தான்பேட்டை மற்றும் சர்க்கார்சாமக்குளம் பகுதியிலும், 29.09.2026 அன்று ஆனைமலை, பொள்ளாச்சி (வடக்கு), பொள்ளாச்சி (தெற்கு), வால்பாறை மற்றும் அன்னூர் பகுதியிலும், 30.09.2026 அன்று சூலூர் பகுதியிலும் நடைபெற்றுள்ளன. 03.10.2026 அன்று மதுக்கரை மற்றும் பேரூரில் நடைபெறவுள்ளது. கோவை மாவட்டம் முழுவதும் சமுதாய வளைகாப்பு விழாவின் மூலம் ஏறக்குறைய 1,800 கர்ப்பிணி தாய்மார்கள் இத்திட்டத்தின்கீழ் பயன்பெறவுள்ளனர். இத்திட்டத்தின்கீழ், பயன்பெற்ற கர்ப்பிணி தாய்மார்கள், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கீழ்க்கண்டவாறு தங்களது நன்றிகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொண்டனர்.

சமுதாய வளைகாப்பு நிகழ்வில், பங்கேற்று பயனடைந்த கர்ப்பிணித் தாய் சுனிந்தினி, நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்ததாவது:-
“நான் கோவை ஆவாரம் பாளையத்தில் கணவருடன் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் நித்தோஷ், பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். எனக்கு தற்போது 7 மாதம் ஆகிறது. தமிழ்நாடு அரசின் சார்பில், நடைபெறும் சமுதாய வளைகாப்பு விழாவில், எங்களைப் போன்ற கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வளையல் அணிவித்து, சீர்வரிசைப் பொருட்கள், பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. குறிப்பாக, கர்ப்பிணித் தாய்மார்களின் நலனில், அக்கறை கொண்டு இதுபோன்ற சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்தார்.

சமுதாய வளைகாப்பு நிகழ்வில், பங்கேற்று பயனடைந்த கர்ப்பிணித் தாய்மார் திவ்யா, நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்ததாவது :-
“நான் மணியகாரன்பாளையம் பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் குமார், இன்றைய சமுதாய வளைகாப்பு விழாவில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் உள்ளது. எங்களுக்கு தேவையான சீர்வரிசைப் பொருட்கள், பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளன. கர்ப்பிணித் தாய்மார்களின் உடல் நலத்தையும், பிறக்கவிருக்கும் குழந்தைகளின் நலனையும் கருத்தில் கொண்டு இது போன்ற உதவிகளை வழங்கி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.
சமுதாய வளைகாப்பு நிகழ்வில் பங்கேற்று பயனடைந்த கர்ப்பிணித் தாய்மார் சங்கீதா அவர்கள், நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்ததாவது :-

“நான் கொடிசியா பகுதியில் வசித்து வருகிறேன். எனது கணவர் பெயர் பெரியசாமி, எங்களைப் போன்ற கர்ப்பிணித் தாய்மார்களை ஒருங்கிணைத்து, சமுதாய வளைகாப்பு விழாவை சிறப்பாக நடத்தி, சீர்வரிசைப் பொருட்கள், பழங்கள் மற்றும் ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கியது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த விழா எங்களுக்கு ஒரு குடும்ப விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சியை அளித்துள்ளது. தாய்மார்களின் நலனில் தொடர்ந்து அக்கறை செலுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை நிறைந்தது மனம் நிகழ்ச்சியின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.

தொகுப்பு:
ஆ.செந்தில் அண்ணா
செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
இரா.சரண்
(உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி)
கோவை மாவட்டம்.

படிக்க வேண்டும்

spot_img