Homeபிற செய்திகள்பூ.சா.கோ. கல்லூரி மேசைப்பந்து போட்டியில் சாம்பியன்

பூ.சா.கோ. கல்லூரி மேசைப்பந்து போட்டியில் சாம்பியன்

கோவை பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரிகளுக்கு இடையேயான 2026–27ம் கல்வியாண்டுக்கான ஆண்கள் மேசைப்பந்து போட்டி, பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. போட்டியை பல்கலைக்கழக பதிவாளர் ஆர். ராஜவேல் தொடங்கி வைத்தார். கல்லூரி செயலாளர் டாக்டர் டி. கண்ணையன், முதல்வர் டாக்டர் எம். ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த அணிகள் பங்கேற்ற நிலையில், போட்டிகள் நாக்-அவுட் மற்றும் லீக் முறையில் நடைபெற்றன. இதில் பூ.சா.கோ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது. டாக்டர் ஜி.ஆர்.டி. அறிவியல் கல்லூரி இரண்டாம் இடமும், பாரதியார் பல்கலைக்கழகத் துறைகள் மூன்றாம் இடமும், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நான்காம் இடமும் பெற்றன.

வெற்றி பெற்ற அணிகளுக்கு டாக்டர் டி. கண்ணையன், டாக்டர் எம். ஜெயந்தி ஆகியோர் சான்றிதழ் மற்றும் கோப்பைகளை வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img