கேரளாவைச் சேர்ந்த 28 வயது பெண்ணுக்கு ஏற்பட்ட கர்ப்பப்பை புற்றுநோயை, கர்ப்பப்பையை அகற்றாமல் சிகிச்சை அளித்து கேஎம்சிஹெச் மருத்துவர்கள் குணப்படுத்தினர்.
ஹிஸ்டரோஸ்கோபிக் முறையில் கட்டி அகற்றப்பட்டு, இலக்கு ஹார்மோன் சிகிச்சை அளிக்கப்பட்டது. புற்றுநோய் குணமானதைத் தொடர்ந்து, கேஎம்சிஹெச் செயற்கை கருத்தரிப்பு மையத்தில் ஐயுஐ சிகிச்சை மூலம் கர்ப்பம் அடைந்தார். ஆகஸ்ட் 22-ம் தேதி ஆரோக்கியமான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
இதுகுறித்து கேஎம்சிஹெச் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் டாக்டர் நல்லா ஜி. பழனிசாமி, நிர்வாக இயக்குனர் டாக்டர் அருண் என். பழனிசாமி ஆகியோர் மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தனர். மகளிர் புற்றுநோய் நிபுணர் டாக்டர் அன்புக்கனி, சரியான மருத்துவ மேலாண்மை மூலம் புற்றுநோய் பாதித்த பெண்களும் தாய்மை அடைய முடியும் என்றார்.



