கோயம்புத்தூர் மாவட்டத்தை ஏற்றுமதி மையமாக மாற்றும் வகையில், மாவட்ட தொழில் மையம் சார்பில் திறன் மேம்பாட்டு கூட்டம் கலெக்டர் பவன்குமார் கிரியப்பனவர் தலைமையில் நேற்று நடந்தது.
கூட்டத்தில், புதிய மற்றும் ஏற்கனவே ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை முகாம் மூலம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.
வால்மார்ட், பிளிப்கார்ட் நிறுவன பிரதிநிதிகள், மின்வணிகம், டிஜிட்டல் சந்தைப்படுத்தல், ஏற்றுமதி ஆவணங்கள், பேக்கேஜிங், தரச்சான்றிதழ், நிதி மேலாண்மை மற்றும் சர்வதேச சந்தை வாய்ப்புகள் குறித்து விளக்கினர். தொழில் முனைவோர் மற்றும் தொழில் அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.



