பேங்க் ஆஃப் இந்தியாவின் கோவை மண்டல அலுவலகம் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. நேர்மை மற்றும் அறநெறி சார்ந்த நிர்வாகத்தில் கவனம் செலுத்தும் இவ்வங்கியின் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் 2026 -இன் ஒரு பகுதியாக, கோவை மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரச்சார விழா கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வு, அறநெறி சார்ந்த நிர்வாகம், செயல்பாட்டு வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழலற்ற நடைமுறைகளுக்கான வங்கியின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதாக அமைந்தது.

உயர்ந்த ஒழுக்க நெறிகள் மற்றும் பொதுப் பொறுப்புக்கூற லுக்கான தங்கள் அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில், ஊழியர்கள் கூட்டாக நேர்மையுடன் செயல்படு வோம் என்ற உறுதிமொழி ஏற்புடன் இந்நிகழ்ச்சி தொடங்கியது.
கூட்டத்தில் உரையாற்றிய பேங்க் ஆஃப் இந்தியாவின் மண்டல மேலாளர் ரஞ்சித் குமார், வங்கியின் அன்றாட செயல்பாடுகளில் தடுப்புக் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறி, ஊழற்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்குமாறும் நேர்மை மற்றும் பொது நம்பிக்கையில் வேரூன்றிய ஒரு பணி கலாச்சாரத்தை வளர்க்குமாறும் பணியாளர்களைக் கேட்டுக்கொண்டார்.
மேலும் வங்கியின் நடைமுறைகளை நேர்மையுடன் கண்டிப்பாகப் பின்பற்றுமாறும், வாடிக்கையாளர் மற்றும் நிர்வாக சேவைகள் அனைத்திலும் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுமாறும் மண்டல மேலாளர் ரஞ்சித் குமார் வலியுறுத்தினார்.
வங்கி செயல்பாட்டில் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், புதுப்பிக்கப்பட்ட இணக்க வழிகாட்டுதல்கள், டிஜிட்டல் கண்காணிப்பு முயற்சிகள் மற்றும் உள்ளக முறைகேடு அம்பலப்படுத்தும் வழி முறைகள் குறித்த ஒரு தகவல் அமர்வும் இந்த நிகழ்ச்சியில் இடம் பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி அமித் பிரதான், துணை மண்டல மேலாளர் ஏ.சிவசுப்ரமணியன் மற்றும் மண்டல அலுவலகம், கடன் செயலாக்க மையங்களின் பணியாளர்கள் பங்கேற்றனர்.



