கோவை மாவட்டம் சிறுமுகை வனச்சரகம் பெத்திக்குட்டை பிரிவு, உளியூர் காவல் சுற்று, உளியூர் சராகம் பகுதியில் கடந்த 2ஆம் தேதி இடது முன்னங்காலில் இரும்பு கம்பி சுற்றி காயமடைந்த பெண் யானை ஒன்று கண்டறியப்பட்டு அதற்கு 6.9.26 ஆம் தேதி நடை மருத்துவ குழுவினரால் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதைத்தொடர்ந்து நோய் தொற்று இருப்பதின் காரணத்தினால் வன கால்நடை மருத்துவர்களின் ஆலோசனைப்படி வனப்பணியாளர்கள் குழுக்கள் அமைத்து யானைக்கு தேவையான மருந்துகள் பழங்களிலும் தண்ணீரிலும் கலந்து கொடுத்து தொடர்ந்து யானையின் உடல்நலம் கண்காணிக்கப்பட்டது.
இதை அடுத்து கடந்த 13.09.26 தேதி அன்று காலை வேலையில் யானை கண்காணிக்கும் பணி மேற்கொண்ட போது சிகிச்சை அளிக்கப்பட்ட யானை தென்படவில்லை, இத்தகவலை மாவட்ட வன அலுவலர் கோவை வனக்கோட்டம் கோவை அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மாவட்ட வன அலுவலர் அவர்களின் அறிவுரையின்படி 14.09.26ஆம் தேதி முதல் யானையினை தேடும் பணி வனப்பணியாளர்கள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில் நேற்று மீண்டும் யானையினை தேடும் பணி மேற்கொண்டதில் யானை தாமரைப் பாலி என்ற இடத்தில் புதர் மறைவில் இறந்த நிலையில் கண்டறியப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் உத்தரவின்படி இன்று உடற்கூறாய்வு மேற்கொள்ளப்படுகிறது.



