சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக்கழகப் பொறியியல் புலத்தில் முதலாம் ஆண்டு இளநிலைப் பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா, பொறியியல் புலக் கலையரங்கில் திங்களன்று (செப்.7) நடைபெற்றது.
விழாவுக்குப் பொறியியல் புல முதல் வர் பேராசிரியர் சி.ஜி. சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணா மலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், மும்பை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான தீபேஷ் கிரேன் நந்தா கலந்துகொண்டு முதலாம் ஆண்டு வகுப்புகளைத் தொடங்கி வைத்தார். விழாவில் அவர் மாணவர்களிடம் பேசு கையில், மாணவர்கள் கல்வியை நன்கு புரிந்து கொண்டு ஆர்வத்துடன் பயின்றால், தங்களைப் போலவே உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றார். மேலும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் எனத் தெரிவித்தார்.
மேலும், மேம்பட்ட மென்பொருட்களுக் கான உரிமங்கள் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் என்றும், நிறுவனத்தின் ஆதரவுடன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் செயற்கை நுண் ணறிவு மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தில் தேவை யான வசதிகளை மேம்படுத்தி, ஐ.ஐ.டி.-களுக்கு இணையான உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்ல அரசு ஆதரவைப் பெற நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அத்துடன், பல்கலைக்
கழகத்தில் சூரிய மின்தகடு கள் அமைப்பதற்கு நிறுவனம் உதவி செய்து, மின்சாரச் செலவைக் குறைக்க நடவடிக்கை மேற் கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
விழாவில் பேராசிரியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் டி. பாலசுப்பிரமணியம், சரவணன், மணிக்குமாரி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில் 1,000-க் கும் மேற்பட்ட மாணவ,மாணவி களும் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாலசங்கர் நன்றி கூறினார்.



