Homeபிற செய்திகள்சென்னிமலை நெசவாளி வடிவமைப்பில் உருவானது: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அவரது உருவம் பொறித்த போர்வை வழங்கிய மருத்துவர்கள்

சென்னிமலை நெசவாளி வடிவமைப்பில் உருவானது: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு அவரது உருவம் பொறித்த போர்வை வழங்கிய மருத்துவர்கள்

பெருந்துறைக்கு வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு, அவரது உருவம் பொறித்த போர்வை வழங்கப்பட்டது.
சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் துணி வடிவமைப்பாளராகப் பணியாற்றி வருபவர் அப்புசாமி. இவர் கிரிக்கெட் வீரர்கள், பல்வேறு தலைவர்கள் உள்ளிட் டோரின் உருவங்களை வடிவமைத்து, அவற்றை ஜக்கார்டு தறி மூலம் துணிகளில் உருவாக்கி வருகிறார்.
அந்த வகையில், குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனின் உருவம் பொறித்த போர்வையையும் அப்புசாமி வடிவமைத்து, ஜக்கார்டு தறியில் உருவாக்கியிருந்தார்.
இந்நிலையில், பெருந்துறையில் உள்ள தனியார் கல்லூரி விழாவில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை வந்த குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், அங்குள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றார்.
அப்போது சென்னி மலையைச் சேர்ந்த மருத்துவர்கள் யுவராஜ் குமார், தாரணி பிரியா ஆகியோர், அப்புசாமி வடிவ மைத்த அவரது உருவம் பொறித்த போர்வை யை குடியரசு துணைத் தலைவரிடம் நேரில் வழங்கினர்.
போர்வையைப் பெற்றுக் கொண்ட சி.பி. ராதா கிருஷ்ணன், வடிவமைப் பாளர் அப்புசாமிக்கு மருத்துவர்கள் மூலம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

படிக்க வேண்டும்

spot_img