Homeபிற செய்திகள்சேலம் ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில் ‘பிரில்லியன்ஸ்’ வைர நகை கண்காட்சி

சேலம் ஜோய்ஆலுக்காஸ் ஷோரூமில் ‘பிரில்லியன்ஸ்’ வைர நகை கண்காட்சி

ஜோய்ஆலுக்காஸ் சேலம் ஷோரூமில் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோ’ ஆகஸ்ட் 28 ம் தேதி தொடங்கியது. இந்த கண்காட்சி செப்டம்பர் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மணமகளுக்கான பிரத்யேக நகைகள் முதல் அன்றாடம் அணியக்கூடிய நவீன வைர நகைகள் வரை பல்வேறு வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து ஜோய்ஆலுக்காஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோய் ஆலுக்காஸ் கூறுகையில், “வைரங்களின் மீதான எங்கள் பெருமையையும், சிறந்த நகை வடிவமைப்புக்கான அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது. கண்காட்சி காலத்தில் ரூ.1 லட்சம் மற்றும் அதற்கு மேல் மதிப்பிலான வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படும்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img