திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீபக் ஜேக்கப் தலைமையில், கலெக்டர் வந்தனா கார்க் முன்னிலையில் அனைத்து அரசு துறைகளின் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் காமராஜர் காலை உணவுத் திட்ட விரி வாக்கம், அருணாசலேசுவரர் கோவில் தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டது. சாத்தனூர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டத்தை தொடர்ந்து கண் காணிக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் வேளாண்மைத் துறையின் உரம், விதைகள், விவசாய இயந்திரங்கள் இருப்பு, வருவாய்த்துறையின் சான்றிதழ்கள் மற்றும் பட்டா மனுக்கள், அரசு விடுதிகளின் அடிப்படை வசதிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு அறிவு றுத்தப்பட்டது.



