ஈரோடு மாட்டுச் சந்தையை வேறு இடத் துக்கு மாற்ற கருங்கல் பாளையம் பகுதியை சேர்ந்த பொது மக்கள் ஈரோடு கலெக்டர் அலு வலகம், தமிழக முதல் அமைச்சரின் தனிப் பிரிவுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர். அவர்கள் மனுவில் தெரிவித்துள் ளதாவது: ஈரோடு கருங்கல் பாளையம் சோதனை சாவடி அருகில் மாட்டுச் சந்தை வாரந்தோறும் புதன் மற்றும் வியாழக்கிழமை நாட்களில் அதிகாலை 4 மணியளவிலிருந்து காலை 10 மணி வரை நடக்கிறது.
அப்போது ஈரோடு, சேலம், பெங்களூர் செல்லும் சாலையில் மாட்டு சந்தைக்கு 500-க்கு மேற்பட்ட வாகனங்களை நிறுத்தி வைத்து விட்டு சென்று விடுகின்றனர். இது பள்ளி வாகனங்கள் வேலைக்கு செல்லும் அரசு பேருந்துகள், கல்லூரி வாகனங்கள், நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களுக்கு இடையூறாக உள்ளது.
வண்டி வாகனங்கள் ரோட்டின் மீது நிற்பதால் பொதுமக்களுக்கு இடையூறு நடைபெறுவது மட்டும் இல்லாமல் விபத் துக்குள்ளாகிறது.
மாட்டு சந்தை நடக் கும் இடத்திற்கு அருகில் சோளீஸ்வரர் திருக் கோவில், சாய்பாபா கோயில், மகுதி ஆகியவற் றிற்கு செல்லும் வழியிலும் வாகனத்தை நிறுத்தி விடு கின்றனர். இந்த பாதிப்பு குறித்து இப்பகு தியை சேர்ந்த பொது மக்கள் பலமுறை புகார் மனு கொடுத்துவிட்டோம். எனவே, இது குறித்து விசாரித்து நடவ டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரி விக்கப்பட்டுள்ளது.



