தூத்துக்குடி மரக்குடி தெருவில் உள்ள புதுப்பித்த புனித செபஸ்டியார் கெபியை மாதா ஆலய பங்குதந்தை ஜான் செல்வம் திறந்து வைத்து இரண்டுபேருக்கு தையல் எந்திரம் மற்றும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
புனித செபஸ்டியார் கெபியை புதுப்பித்து தந்த தொழிலதிபர் நிக்சன், புனித அந்தோணியார் கெபியை வழங்கிய சார்லி மிசியர், புனித செபஸ்டியார் கெபியை கட்டி தந்த மென்ட் லி கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தினர் மற்றும் தையல் எந்திரத்தை வாங்கி கொடுத்த சேம்சன் மற்றும் பல நிதி உதவிகளை வழங்கியவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் பங்கு துணைத் தலைவர் அண்டோ, இணைச் செயலாளர் பெனட், முன்னாள் செயலாளர் கென்னடி, ஜோசப், முன்னாள் பொரு ளாளர் ஜாய், ரவி, எட்வின் பாண்டியன், ஸ்பெல்மன், சசிக்குமார், வர்கீஸ் உடன் புனித செபஸ்டியாரின் இளைஞரணி மற்றும் மகளிரணியினர் கலந்து கொண்டனர்.



