Homeபிற செய்திகள்காந்திகிராம பல்கலைக்கழக பொன்விழா100 முன்னாள் மாணவர்கள் கவுரவிப்பு

காந்திகிராம பல்கலைக்கழக பொன்விழா100 முன்னாள் மாணவர்கள் கவுரவிப்பு

காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் பொன்விழா கொண்டாடும் நிலையில், முன்னாள் மாணவர்கள் சங்கம் மற்றும் முன்னாள் மாணவர் உறவுகளுக்கான மையம் சார்பில் 100 முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு வெள்ளிவிழா அரங்கில் நடந்த விழாவுக்கு பல்கலை துணைவேந்தர் ந.பஞ்ச நதம் தலைமை வகித்தார். பதிவாளர் (பொறுப்பு) மு.சுந்தரமாரி முன்னிலை வகித்தார். முன்னாள் மாணவர் உறவுகளுக்கான இயக்குநர் மேரிசாந்தி வரவேற்றார்.
விழாவில் துணைவேந்தர் ந.பஞ்ச நதம் பேசுகையில், கல்வி நிறுவனங்களின் வளர்ச்சியில் முன்னாள் மாணவர்களின் பங்கு முக்கியமானது, என்றார்.
நிகழ்ச்சியில் நெய்வேலி அனல்மின் நிலைய முன்னாள் இயக்குநர் ம.வெங்கடாசலம், முனைவர் கே.ராஜா பிரண்மலை, செயலாளர் முனைவர் எஸ்.மணிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img