கோவை குனியமுத் தூரில் பிரேம் தீப் ஜுவல்ஸ்-ன் புதிய ஷோரூம் துவக்க விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல திரைப்பட நடிகை ஆன்ட்ரியா கலந்து கொண்டு புதிய ஷோரூமை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.விழாவிற்கு வந்த அனைவரையும் பிரேம் தீப் ஜுவல்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தேவராஜ் வரவேற்றார்.
திறப்பு விழாவை முன்னிட்டு நகை வாங்கும் அனைத்து வாடிக்கை யாளர்களுக்கும் 24 காரட் தங்க நாணயமும், வைரத்திற்கு செய்கூலியில் 50 சதவீதம் தள்ளுபடியோடு வெள்ளி நகை வாங்கும் அனைவருக்கும் நிச்சயப் பரிசு உண்டு.
விழாவில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன், நேரு கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலருமான வழக்கறிஞர் டாக்டர் பி.கிருஷ்ணதாஸ், தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பி. கிருஷ்ணகுமார், இயக்குனர் டாக்டர் முரளிதரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



