திருவள்ளூர் மாவட்ட சப்& ஜூனியர் 17 வயதுக்குட்பட் டோருக்கான பாட் மிண்டன் சேம்பியன் ஷிப் -2026 போட்டிகள் ஆகஸ்ட் 1 மற்றும் 2ம் தேதிகளில் அம்பத்தூர் பெதர்ஸ் பேட்மிண்டன் அகாடமியில் நடைபெற்றது. இதற் கான ஏற்பாடுகளை திருவள்ளூர் மாவட்ட பேட்மிண்டன் அசோசியேஷன் செய்திருந்தது.
இதில் சிங்காரம் பிள்ளை மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவனும் சுரேஷ் -மகாலட்சுமி தம்பதியினரின் மகனுமான எஸ்.மோகன் பங்கேற்று அபாரமாக விளையாடினார். இதில் அரையிறுதிப் போட்டியாளராக ஆடி மூன்றாம் பரிசாக வெண்கலப் பதக்கம் வென்றார்.
அவருக்கு சக போட்டியாளர்களும் பேட்மிண்டன் அசோசியேஷன் நிர்வாகிகளும் பாராட்டினர்.



