கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், ஆடிஸ் வீதியில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில், நவீன வசதிகளுடன் அமைந் துள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் த.சரத் குமார் மாநக ராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா முன்னிலையில், நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண் டார்.
கோவை மாநகராட்சி, மத்திய மண்டலம், வார்டு எண்.83-க்கு உட் பட்ட பகுதியில், நூலகம் மற்றும் அறிவுசார் மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தல் தின மும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவி யர்கள், பட்டதாரிகள், இளைஞர் கள் உள்ளிட்ட ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
குறிப்பாக, பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், பட்டதாரிகள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாரா கும் இளைஞர்கள் அறி வாற்றல் மற்றும் திறன் மேம்பாட்டை அடைந்து அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை வாய்ப்புகளைப் பெறும் நோக்கத்துடன் இம்மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தில் ஒரே நேரத்தில் சுமார் 100 நபர் கள் அமர்ந்து படிக்கும் வசதி, செய்தித்தாள்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், 15 கணினிகளுடன் டிஜிட் டல் நூலகம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை மற்றும் நவீன வசதிகளு டன் செயல்பட்டு வரு கிறது. மேலும், இந்த மையத்தில் சுமார் 5,000-க் கும் மேற்பட்ட புத்தகங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் கடந்த மாதம் வரை சுமார் 28,000 நபர்கள் படித்து பயன் பெற்றுள்ளனர். இம் மையத்தை பயன்படுத்தி மாணவர்கள் பல்வேறு அரசு மற்றும் வங்கித் தேர்வுகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கூட்டுறவுத்துறை, உள்ளுர் நிதித் தணிக்கைத் துறை, காவல்துறை, வருவாய்த் துறை, கல்வித்துறை, உள்ளிட்ட பல்வேறு துறைக ளில் பணிநியமனம் பெற்று, பணியாற்றி வருகிறார்கள்.
இம்மையத்தினை மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் த.சரத் குமார் நேரில் சென்று பார்வையிட்டு, இளைஞர் களுடன் கலந்துரையாடி, போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் குறித்து கேட்ட றிந்தார்.
முன்னதாக, முன்னாள் படை வீரர் நல அலு வலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்ச ரிடம் மாநகராட்சி ஆணையாளர் மாநக ராட்சி சார்பில் 2025ம் ஆண்டிற்கான கொடி நாள் இலக்கினை எய்தி, ரூ.61.96 லட்சத்திற்கான (100 சதவீதம்) வங்கி வரைவோலையினை வழங் கினார்.இந்நிகழ்வின்போது, உதவி ஆணையர் தட்சிணாமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் சரவணக்குமார் (பொ), மண்டல சுகாதார அலு வலர் குணசேகரன், உதவி பொறியாளர் சதீஷ்குமார், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் சரவணகுமார் மற்றும் மாந கராட்சி அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



