fbpx
Homeபிற செய்திகள்ரெனாஃபிளக்ஸ் ஃபைபர் சிமெண்ட் போர்டுகள் அறிமுகம்

ரெனாஃபிளக்ஸ் ஃபைபர் சிமெண்ட் போர்டுகள் அறிமுகம்

ஈரோட்டைச் சேர்ந்த ரெனாடஸ் குழுமம், தனது ரெனாடஸ் பிராடக்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் மூலம், ரெனாஃபிளக்ஸ் என்ற புதிய ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் நாயுடுப்பேட்டையில் ரூ.350 கோடி முதலீட்டில் உலகத் தரத்திலான ஒருங்கிணைந்த உற்பத்தி ஆலையை நிறுவியுள்ள ரெனாகான் நிறுவனம், இந்தியாவில் முதன்முறையாக லேமினார் ஃப்ளோ டெக்னாலஜி மூலம் ஃபைபர் சிமெண்ட் போர்டுகளை தயாரிக்கத் தொடங்கியுள்ளது.


உள்பிரிவு சுவர்கள், போலி மேற்கூரைகள், முன்தயாரிப்பு கட்டிடங்கள், மாடுலர் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பயன்பாடுகளுக்கு இந்த போர்டுகள் ஏற்றவை. தீ எதிர்ப்பு, ஈரப்பத எதிர்ப்பு, கரையான் தாக்காத தன்மை, நீண்ட ஆயுள் மற்றும் குறைந்த பராமரிப்பு ஆகியவை இதன் முக்கிய அம்சங்களாகும்.
இது குறித்து ரெனாடஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் செல்வசுந்தரம் கூறுகையில், “கோவையில் ரெனாஃபிளக்ஸ் அறிமுகம் நிறுவனத்தின் வளர்ச்சியில் முக்கிய மைல்கல்லாகும்“ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img