fbpx
Homeபிற செய்திகள்ராம்நகர் ராயல்ஸ் லயன்ஸ் சங்க பதவி ஏற்பு விழா

ராம்நகர் ராயல்ஸ் லயன்ஸ் சங்க பதவி ஏற்பு விழா

கோவை லயன்ஸ் மாவட்ட 3242(c) ராம் நகர் ராயல்ஸ் சங்கத்தின் பதவி ஏற்பு விழா ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள சீமா அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆளுனர் PMJF பிஎஸ்.செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்பித்தார். மற்றும் இரண்டாம் நிலை ஆளுநர் PMJF பாஸ்கர் மேலும் கேபினட் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


விழாவில் லயன் ஏ.கே.சுப்ரமணியன் சங் கத்தின் தலைவராகவும் லயன் கோதண்டம் செயலாளராகவும் பதவி ஏற்றார்கள். கூட்டத்தை லயன் விக்ரமாதித்தன் தலைமை தாங்கி நடத்தினார். இக்கூட்டத்திற்கு சங்க முன்னாள் ஆளுநர்கள் PMJF சாரதாமணி பழனிச்சாமி மற்றும் PMJF ஏ.ராஜசேகர் ஆகியோர் சங்கத்தின் பதவி ஏற்பு நிகழ்வுகளை முறைப்படி நடத்தி வைத்தார்கள். சங்கத்தில் 06 புதிய உறுப்பினர்களும் இணைக்கப்பட்டனர். நிகழ்வுகளை கேஎஸ்பி தொகுத்து வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img