fbpx
Homeபிற செய்திகள்கோவை ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ  பள்ளி ஆண்டு விழா: கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலம்

கோவை ஸ்டேன்ஸ் ஐ.சி.எஸ்.இ  பள்ளி ஆண்டு விழா: கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலம்

கோவை ஸ்டேன்ஸ் பள்ளி ஐ.சி.எஸ்.இ/ஐ.எஸ்.சி (ICSE/ISC)  2026-2027ம் கல்வியாண்டிற்கான ஆண்டு பரிசு வழங்கும் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகள், பள்ளி வளாகத்தில் உள்ள ராஜேந்திரன் விளையாட்டு அரங்கில்  நடைபெற்றது.


நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக சாந்தி ஆஷ்ரம் தலைவரும், சர்வதேச குழந்தைகள் மற்றும் பொது சுகாதார மையத்தின் நிறுவனருமான டாக்டர் கெசெவினோ ஆரம் கலந்துகொண்டு சிறப்பு ரையாற்றி, கல்வி மற்றும் விளையாட்டுத் துறைகளில் சாதனை படைத்த மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.


முன்னதாக பள்ளியின் துணை முதன்மை மாணவர் ஆரோன் யோஹான் ஜோசப் பிரார்த்தனை மற்றும் பைபிள் வாசிப்புடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். பள்ளி முதல்வர் ஜெனட் ஜெயப்பிரகாஷ் அனைவரையும் வரவேற்று, பள்ளியின் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.


விழாவில் சாந்தி ஆஷ்ரம் தலைவர் டாக்டர் கெசெவினோ ஆரம் பேசுகையில், மாணவர்கள் கல்வியுடன் சமூக அக்கறையையும் நற்பண்புகளையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறிவு றுத்தினார்.


விழாவைத் தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ‘ட்ரை ஏ லிட்டில் கைண்ட்னெஸ்’, ‘ஃபுட்பால் ஃபியஸ்டா’, ‘கார்ட்டூன் கார்னிவல் ஆஃப் ஹேம்லின்’ மற்றும் ‘எக்கோஸ் ஆஃப் செசமே’ போன்ற பல்வேறு நாட்டிய, இசை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.


விழாவில் பள்ளியின் நிர்வாகப் பொறுப்பாளர்  பிலிப் ஆர்.ஜே.ஃபவுலர், கௌரவப் பொருளாளர் டாக்டர் ஜேம்ஸ் ஞானதாஸ், நிர்வாகக் குழு உறுப்பினர் டாக்டர்  சுசீதா ராமச்சந்திரன், தலைமை நிர்வாக அதிகாரி  வி.எம்.ஜான், ஆங்கிலோ- இந்தியன் பிரிவு முதல்வர் பி.ஏ.ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ முதல்வர்  ஐலின் ஜெத்ரோ மற்றும் ஸ்டேன்ஸ் இன்டர்நேஷனல் முதல்வர்  ஜார்ஜினா சிம்மன்ஸ் உள்பட பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் திரளாகக் கலந்து கொண்டனர்.


நிகழ்ச்சியின் நிறைவாகப் பள்ளி தலைமை மாணவர் நோயல் வின்சென்ட் கூடின்கோ மற்றும் தலைமை மாணவி அவந்திகா பி. ஆகியோர் நன்றியுரை ஆற்றினர்.

படிக்க வேண்டும்

spot_img