மருத்துவக் கல்வித்துறையில் தனது 40 ஆண்டு கால வரலாற் றுச் சிறப்புமிக்க பயணத்தைக் குறிக்கும் வகையில், கோவை ஜி.கே.என்.எம் செவிலியர் கல்லூரியின் புத்தம் புதிய பிரம் மாண்டமான வளாகம் திறப்பு விழா நேற்று நடந்தது.1984 ஆம் ஆண்டு முதல் ஜி.கே.என்.எம். மருத்துவமனை யின் ஒரு அங்கமாக செயல்பட்டு வந்த செவிலியர் பயிற்சி நிறுவனம் இன்று மாபெரும் செவிலியர் கல்லூரியாக புதிய வளாகத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
ஜி.கே.என்.எம் செவிலியர் கல்லூரியினை குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதா கிருஷ்ணன் திறந்து வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சிறப்பு விருந்தினராக இதில் கலந்து கொண்டார்.
குப்புசாமி நாயுடு அறக் கட்டளையின் தலைவரான ஆர்.கோபிநாத், துணைத் தலைவர் திரு.சஞ்சய் ஜெயவர்த் தனவேலு மற்றும் ஜி.கே.என்.எம் மருத்துவமனை யின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசாமி உள்ளிட்ட குப்புசாமி நாயுடு தொண்டு அறக்கட்டளையின் தலைவர்கள் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேக்கர், செவிலியர் பணி என்பது மேற்கத்திய கலாச்சாரம் என பலரும் கருதுவதுண்டு, ஆனால் செவிலியர் பணி என்பது நமது கலாச்சாரத்தின் ஒரு அங்க மாகவே இருந்துள்ளது, மக்கள் சேவையே மகேசன் சேவை என் பது நமது கலாச்சார மாகும். அந்த வகையில் மனித சேவையில் மிக உயர்ந்த சேவையாக செவிலியர் பணி கருதப்படுகிறது, அதை சிறப்பாக செய்வதால் தான் இந்த மருத்துவமனை பெரும் உய ரத்தை அடைந்துள்ளது’ என தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து பேசிய இந்திய குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:
‘ராஜ்ய சபாவில் இறுக்கமான சூழல் உள்ள போதும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என வந்ததற்கு காரணம் இதன் நிறுவனர் குப்புசாமி நாயுடு அவர்கள் விதைத்த நல்ல விதைதான். அதன் காரணமாகவே இன்று பெரும் விருட்சமாக இந்நிறுவனம் வளர்ந்துள்ளது.கல்வி, மருத்துவம் என முக்கியமான இரண்டு துறைகளிலும் இந்நிறுவனம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. நமது கலாச்சாரத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் சேவை செய்பவர்களை உயர்ந்த நிலையில் வைத்துள்ளோம். அதுவே நமது தமிழ் இலக்கியங்களிலும் வெளிப்பட்டுள்ளது.
இந்த நிறுவனம் விரைவில் மருத்துவக் கல்லூரியை துவங்கி சேவை மனப்பான்மையோடு செயல் படும் சிறந்த மருத்துவர் களை உருவாக்க வேண்டும்.
நமது நாட்டில், மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் ரத்த சோகை பாதிப்பு பெருமளவு உள்ளது. இதனை சரி செய்ய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இது போன்ற மருத்துவ கல்லூரிகளும் செவிலியர் கல்லூரிகளும் அதிகமாக திறக்கப்பட வேண்டும். இவை ஆரோக்கியத்தை பற்றிய விழிப்புணர்வை அனைவர் மனதிலும் ஏற்படுத்தும். அதுவே இந்த பாதிப்புகளை சரி செய்யும்.
இன்றைக்கு உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு அதிகமாகியுள்ளது. பலரும் உறுப்பு தானம் செய்ய அதிக அளவில் முன் வருகின்றனர். யாரும் உறுப்பு தானம் செய்ய தயங்க கூடாது. தமிழகத்தில் அதிக அளவில் உறுப்பு தானங்கள் செய்யப்படுவதும், அவை சரியாக முறைபடுத்தப்பட்டுள்ளதும், பலரது உயிர் காக்கப்படுவதும், பெருமைக்குரிய விஷயமாகும்.
மேலும் கண் தானமும் சிறந்த சேவையாகும். அந்த வகையில் பிரதமர் மோடி அவர்களின் இந்த ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு 76 ஆயிரம் பேர் கண்தானம் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
நமது நாட்டில் மருத்துவத் துறையில் பல்வேறு சிறப்பான திட்டங்களும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதம மந்திரியின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை உலகமே வியந்து போற்றியுள்ளது. முதியோர் பயன்பெறும் வகையில் 70 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் இலவசமாக மருத்துவ சேவை பெரும் வகையில் வயோபந்தனா திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் முதியோர்க்கு என சிறப்பு மருத்துவமனை மத்திய அரசால் செயல்பட்டு வருகிறது. மருத்துவத் துறையை டிஜிட்டல் மயமாக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக பிரதமரின் மருந்தகம் திட்டத்தின் கீழ் மலிவு விலையில் ஜெனரிக் மருந்துகள் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்படுகிறது.2047 ஆம் ஆண்டில் நமது நாடு வளர்ந்த பாரதமாக உலக நாடுகளுக்கு வழிகாட்டும் பாரதமாக உருவாக, சுகாதார துறையில் வெற்றியை காண வேண்டும். அதற்கு மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. இதில் தனியார் பங்களிப்பும் மிகவும் அவசியமாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



