fbpx
Homeபிற செய்திகள்சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் முதியவருக்குமுதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகரமாக சிகிச்சை

சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் முதியவருக்குமுதுகுத்தண்டு அழுத்தத்திற்கு வெற்றிகரமாக சிகிச்சை

முதியவர் ஒருவர் தீவிர முதுகெலும்பு வளைவுப் பாதிப்பு மற்றும் தண்டுவட நரம்பு சுருக்கம் காரணமாக கடும் வலியால் சில அடிகள் கூட நடக்க முடியாத நிலையில் சென்னை சிம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில், முதுகெலும்பு வளைவு காரணமாக இடுப்புப்பகுதியில் நரம்புகள் கடுமையாக அழுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து வெறும் 8மி.மீ. அளவிலான ஒற்றைத்துளை வழியாக ‘யூனிபோர்ட்டல் எண் டோஸ்கோபிக்‘ முறையில் நரம்பு அழுத்தம் அகற்றப்பட்டது. இந்த அறுவை சிகிச்சை சவாலானதாக இருந்தது. மேலும், நோயாளிக்கு ஏற்கனவே பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததுடன், இதயத்தில் நிரந்தர பேஸ்மேக்கரும் பொருத்தப்பட்டிருந்ததால், அறுவை சிகிச்சை மற்றும் மயக்க மருந்து அளிப்பதில் கூடுதல் கவனம் தேவைப்பட்டது.
இந்நிலையில், எலும்பியல் மற்றும் முதுகுத்தண்டு அறுவை சிகிச்சை நிபுணர்கள் டாக்டர் ஜி. வெங்கடேஷ் குமார், டாக்டர் விக்னேஷ் ஜெய பாலன், துறையின் இணை இயக்குநர் டாக்டர் விஜய் சி.போஸ் மற்றும் இதயநோய் நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழு இந்த சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து, சிக்கலான நோய்களுக்கும் தரமான சிகிச்சை அளிப்பதே எங்களின் நோக்கம், என்றார்.

படிக்க வேண்டும்

spot_img