fbpx
Homeபிற செய்திகள்காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

காங்கிரஸ் கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

பெருந்தலைவர் காமராஜரின் 125-வது பிறந்த நாளையொட்டி கரூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தாந்தோணி வட்டாரம் கோவிந்தம்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, கரூர் மாவட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் மற்றும் மலர் மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். இதில் மாவட்ட துணைத் தலைவர் சின்னையன், ஆர்.டி.ஐ. மாநில பொதுச் செயலாளர் ஜி.பி.எம். மனோகரன், மாவட்ட செயலாளர் சேகர், சணப்பிரட்டி ஊராட்சி தலைவர் முத்துசாமி, பொருளாளர் செல்வராஜ், வழக்கறிஞர் பிரிவு தலைவர் ரவிச்சந்திரன், ஆட்டோ பாலு, கிராம காங்கிரஸ் கமிட்டி தலைவர் கன்னையன் உள்ளிட்டோர் பங்கேற்று மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியின் நிறைவில் குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img