மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக, 40 வய திற்கு மேற்பட்ட பெண்களுக்கு கோவை கங்கா மருத்துவமனை மேற் கொண்டு வரும் ‘ப்ராஜெக்ட் சக்தி’ என்னும் மருத்துவ பரிசோதனை திட்டத்தின் 150-வது இலவச மார்பகப் புற்றுநோய் பரிசோதனை முகாம் ஈஷா யோகா மையத்தின் ஆதியோகி வளாகத்தில் நடைபெற்றது.இந்த முகாமில் ஏராளமான பெண்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், நோயை ஆரம்பத்திலேயே கண்டறிதல், மார்பக சுய-பரிசோதனை செய்து கொள்ளுதல் மற்றும் சிறந்த ஆரோக் கியத்திற்கு உரிய நேரத்தில் மருத்துவ உதவி பெறுவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்தச் சிறப்பு முகாம், கங்கா மருத் துவமனையின் நவீன மேமோகிராபி வசதிகள் கொண்ட நடமாடும் மார்பகப் புற்றுநோய் பரிசோதனை வாகனம் மூலம் நடத்தப்பட்டது. ஈஷா யோகா மையத்தைச் சேர்ந்த மா சந்திர ஹாசா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு இந்த முகாமைத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய கங்கா மருத்துவமனையின் மார்பகப் புற்றுநோய் அறுவை சிகிச்சை மற்றும் பிளாஸ்டிக் சர்ஜரி நிபுணர் டாக்டர் ராஜா சண்முக கிருஷ்ணன், உயிர் களைக் காப்பாற்றுவதில் நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் அவர் கூறியதாவது: “பெண்களைப் பாதிக்கும் புற்று நோய்களில் மார்பகப் புற்று நோய் மிகவும் பொதுவானது. பெண்களைத் தாக்கும் அனைத்துப் புற்றுநோய்களிலும் இது சுமார் நான்கில் ஒரு பங்காக உள்ளது. இதை எப்போதும் தடுத்துவிட முடியாது என்றாலும், ஆரம்பத்தி லேயே கண்டறிந்து சரியான சிகிச்சை அளிப்பதன் மூலம் சிறந்த பலன்களைப் பெறலாம். ஆரம்பக் கட்டத்திலேயே மார்பகப் புற்று நோயைக் கண்டறிந்தால், அவர்கள் 5 ஆண்டுகள் உயிர்வாழ்வதற்கான வாய்ப்பு 99 சதவீதமாக உள்ளது. எனவே, வழக்கமான பரிசோதனைகள் மற்றும் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவது மிகவும் அவசியமாகும்.அதிக விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நவீன பரிசோதனை வசதிகளை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல் மற்றும் பெண்களுக்கு உரிய நேரத்தில் நோய் கண்டறிதல், சரியான சிகிச்சை மற்றும் முழுமையான ஆதரவு கிடைப்பதை உறுதி செய்தல் ஆகியவையே ‘ப்ராஜெக்ட் சக்தி’ திட்டத்தின் நோக்கமாகும். இது வெறும் பரிசோதனையோடு நின்றுவிடாமல், நவீன தொழில்நுட்பம் மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்புடன் கூடிய சிறப்பான சிகிச்சையை வழங்க வேண்டும் என்ற எண் ணத்தை பிரதிபலிக்கிறது.
வழக்கமான முகாம்களைப் போல இல்லாமல், ‘ப்ராஜெக்ட் சக்தி’ ஒரு முழுமையான மார்பகப் புற்றுநோய் பராமரிப்பு முறையைப் பின்பற்றுகிறது. விழிப்புணர்வு மற்றும் ஆரம்பக்கட்ட பரிசோதனை முதல் நோய் கண்டறிதல், சிகிச்சை மற்றும் மறுவாழ்வு வரை ஒரு பெண்ணின் மருத்துவப் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் இந்தத் திட்டம் துணை நிற்கிறது. இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை மூலம், நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உரிய நேரத்தில் மருத்துவ வழிகாட்டுதல், சரியான சிகிச்சை மற்றும் நோயறிதலுக்குப் பிறகான தொடர்ச்சியான ஆதரவு கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதுவரை 10,122 பெண்களுக்கு மார்பகப் பரிசோதனை செய் யப்பட்டதில் புற்றுநோய் கண்டறி யப்பட்ட 81 பெண்களுக்கு கங்கா மருத்துவமனை மூலம் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட் டுள்ளது.
ப்ராஜெக்ட் சக்தி பற்றி….
கடந்த 2022-ல் தொடங்கப்பட்ட இத்திட்டம், பெண்களுக்கான மார்பகப் புற்றுநோயை ஆரம்பத் திலேயே கண்டறிந்து, உரிய நேரத்தில் சிகிச்சை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மருத்துவமனைக்கு வரத் தயங்கும் பெண்களுக்காக, ‘நடமாடும் மேமோகிராபி வாகனம்‘ மூலம் அவர்கள் வசிப்பிடங்களுக்கே சென்று சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் (NGOs) இணைந்து சேலம், திரு வண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மார்பக சுய-பரி சோதனை மற்றும் புற்றுநோய் விழிப் புணர்வு முகாம்கள் நடத்தப்படு கின்றன. பரிசோதனையில் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்படும் ஏழைப் பெண்களுக்கு, கங்கா மருத்துவமனையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி உள்ளிட்ட அனைத்து சிகிச்சைகளும் முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
ஈஷாவின் சமூக சேவை
ஈஷா பவுண்டேஷனின் சமூக சேவைப் பிரிவான இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தரமான கல்வி, கிராமப்புற சுகாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்காகத் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கிராமப்புற மக்களின் முன்னேற் றத்திற்காக இவர்கள் செய்து வரும் சேவைகளைப் பாராட்டி, ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சில் ஈஷாவிற்குச் சிறப்பு ஆலோசனை அந்தஸ்தை வழங்கிக் கௌரவித்துள்ளது.



