இந்திய மருத்துவ சங்கம், பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை, செந்தமிழ் அறக்கட்டளை, கோவை நேரு நகர் லயன்ஸ் சங்கம் மற்றும் கோவை மத்திய சிறைத்துறை இணைந்து சிறைவாசிகளுக்கான இலவச கண் பரிசோதனை முகாமை நடத்தினர்.மத்திய சிறையில் நடந்த இந்த முகாமை செந்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கனகசுப்பிரமணியம், பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் ஜிஎம்டி ஒருங்கிணைப்பாளர் லயன் செந்தில் குமார் ஒருங்கிணைப்பில் சிறை கண்காணிப்பாளர் செந்தில்குமார், இந்திய மருத்துவ சங்கத்தின் தலைவர் கோசல் ராம், பன்னாட்டு லயன்ஸ் இயக்க மாவட்ட ஆளுநர் செல்வராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பொன்னம்மாள் துரைசாமி கண் மருத்துவமனை டாக்டர் அனுஷா கோசல்ராம் தலைமையிலான மருத்துவ குழுவினர் 252 சிறைவாசிகளை கண் பரிசோதனை செய்து 165 சிறைவாசிகளுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது
ஈஷா யோகா மையத்தைச் சார்ந்த மோகன், நேரு நகர் லயன்ஸ் சங்கத் தலைவர் இன்ஜினியர் தேஜஸ்வினி, பெண்கள் தின மாவட்ட தலைவர் சுப்பு செந்தில்குமார், பேராசிரியர் கார்த்திக், நேரு நகர் லயன்ஸ் சங்க அட்மின் கிரீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.



