திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரனவரே தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடை பெற்றது.கூட்டத்தில், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, புதிய குடும்ப அட்டை, சாலை மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்களிடம் இருந்து 693 மனுக்கள் பெறப்பட்டன.மனுதாரர்களின் கோரிக்கைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் விசாரித்து, பெறப்பட்ட அனைத்து மனுக்களையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் அனுப்பி, கள ஆய்வு மேற்கொண்டு அரசின் விதிமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுத்து விரைவாக தீர்வு காணுமாறு உத்தரவிட்டார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் க.கார்த்திகேயன், மாவட்ட ஆட் சியரின் நேர்முக உதவியாளர் (பொது) து.சு.துரைமுருகன், (தேர்தல்) கண்ணன், தனித் துணை ஆட்சியர் (சமூகப்பாது காப்புத் திட்டம்) பத்மபிரியா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சதீஸ் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



