fbpx
Homeபிற செய்திகள்‘யூனியன் சம்மான்’ பென்சனர் திட்டத்தின் கீழ் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி

‘யூனியன் சம்மான்’ பென்சனர் திட்டத்தின் கீழ் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.12 லட்சம் நிதி

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் பென்சனர்களுக்கான சிறந்த சேமிப்பு கணக்கான யூனியன் சம்மான்’ மூலம் விபத் தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.12 லட்சம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய ஓய்வூதியர் சங்கத்தின் 2026 ஆம் ஆண்டு வாழ்நாள் சான்றிதழ் பெறும் முகாம் சேலம் மரவனேரி ஸ்ரீ காமகோடி காமாட்சி மண்டபத்தில் நடை பெற்றது. சங்க நிர்வாகிகள் இதற்கு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். இதில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, நாமக்கல் திருச்சி ரோடு கிளையில் ‘யூனியன் சம்மான்’ என்ற சேமிப்பு கணக்கு வைத்திருந்த தங்கவேல் விபத்தில் மரணம் அடைந்ததால் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாயூனியன் சம்மான்’ சேமிப்பு கணக்கின் விதிகளின்படி அவருடைய வாரிசான நல்லம்மாளுக்கு ரூ.12 லட்சத்திற்கான காசோலையை, வங்கியின் சேலம் பிராந்திய தலைவர் பி.எம்.செந்தில்குமார் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.


அப்போது, ஓய்வூதியர்களுக் கான சிறப்பான சேமிப்பு கணக்கான ‘யூனியன் சம்மான்’ திட்டத்தின் சிறப்பு கள் குறித்து அனைத்து ஓய்வூதி யர்களுக்கும் விரிவாக எடுத்து ரைத்தார். முக்கியமாக இந்த திட்டத்தில் எந்தவிதமான காப்பீடு கட்டணங்களும் வசூலிக்கப்படு வதில்லை என்றும் பிராந்திய தலைவர் பி.எம்.செந்தில்குமார் கூறினார்.
மேலும், அநேக ஓய்வூதியர்கள் மற்ற வங்கிகளில் இருந்து தங்களு டைய சேமிப்பு கணக்குகளை யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் சிறப்பு முகாமில் ‘யூனியன் சம்மான்’ என்ற சேமிப்பு கணக்கிற்கு மாற்றினார்கள்.
இந்த முகாமில் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் வாடிக்கையாளர்களுடைய குறைகள் குறித்து உடனடியாக தீர்வுகள் காணப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img