fbpx
Homeபிற செய்திகள்பல்லடத்தில் பள்ளி, சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு

பல்லடத்தில் பள்ளி, சுகாதார நிலையங்களில் கலெக்டர் ஆய்வு

திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கரைப்புதூர் மற்றும் கணப திபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அரசு திட்டங்க ளை மாவட்ட ஆட்சியர் டாக்டர் மனிஷ் நாரணவ ரே ஆய்வு செய்தார்.
என்.எஸ்.கே. நகரில் வீடு தோறும் குப்பை சேக ரிப்பு பணி, எம்.ஜி.ஆர். நகர் குப்பைக் கிடங்கு, கரைப்புதூரில் ரூ.30 ஆயி ரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி கட்டு மானம், பொன் நகரில் நுண்ணுயிர் உரமாக்கல் மையம், அல்லாளபுரம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
மேலும், அல்லாளபுரம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளி மற்றும் கணபதி பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், மாணவர் வருகைப் பதிவு, பாடப்புத்தகங்கள் ஆகிய வற்றை ஆய்வு செய்தார்.


முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உண வின் தரம், மளிகைப் பொருட் கள், காய்கறிகள் மற்றும் எரிவாயு இருப்பையும் சரி பார்த்தார்.
தொடர்ந்து, அருள்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளர், உள்நோயாளர் பிரிவுகள், மருந்தகம், ஆய்வகம் உள் ளிட்ட வசதிகளை ஆய்வு செய்து, நோயாளி களுக்கு வழங் கப்படும் சிகிச்சை மற்றும் மருந்து இருப்பு குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
ஆய்வின்போது, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சதீஸ்குமார், உதவி திட்ட அலுவலர் சரவணன், வட்டார மருத்துவ அலு வலர் டாக்டர் சுடர் விழி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ரமேஷ், அனு ராதா மற்றும் பல்வேறு துறை அலுவலர்கள் உடனி ருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img