நிர்மலா மகளிர் கல்லூரியின் (தன்னாட்சி) சாலைப் பாதுகாப்புச் சுற்றுக்காவல் மற்றும் தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் காப்பாளர்கள் இணைந்து நிர்மலா மகளிர் கல்லூரியின் முகப்பு வாயில் அருகே மௌன நாடகம், வீதிநாடகம், நடனம் ஆகியவற் றின் மூலம் தலைக்கவசம் அணிய வேண்டியதன் அவசியம், இருக் கைப்பட்டை அணிய வேண்டிய தன் முக்கியத்துவம் முதலான சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியது.
இந்நிகழ்ச்சியானது கல்லூரி யின் செயலர் அருட்சகோதரி முனைவர் குழந்தை தெரேஸ் வாழ்த்துதலுடன் முதல்வர் அருட்சகோதரி முனைவர் மேரி பபியோலா முன்னிலையில் நடை பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்த்துறைத் தலைவர் மற்றும் சாலைப் பாதுகாப்புச் சுற்றுக்காவல் அமைப்பின் அதிகாரி முனைவர் மகேஸ்வரி வரவேற்றுப் பேசி, நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார்.
இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான முனைவர் சிந்தியா, முனைவர் ஏஞ்சல் கிறிஸ்டினா, முனைவர் சுகந்தி, முனைவர் கேன்டேஸ், செல்வி லீதியாள், செல்வி சிந்தியா, முனைவர் திவ்யா, முனைவர் டெய்சி,செல்வி ஸ்வஸ்திகா , முனைவர் நந்தினி ஆகியோரின் ஒத்துழைப்புடன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் தமிழ்நாடு காவல் போக்குவரத்து முதன்மைக் காப்பாளர் ரங்கபிரபு, நிர்வாக மேலாண்மை அதிகாரி சாம் பாபு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர் களாகக் கலந்து கொண்டனர். சாலையில் பாதசாரிகள், வாகன ஓட்டிகள், பெற்றோர் மற்றும் மாணவியர் இந்நிகழ்ச்சியைப் பார்வையிட்டு விழிப்புணர்வு பெற்றனர்.
கோவை மாநகரக் காவல் துறை ஆணணயாளர் மருத்துவர் என்.கண்ணன் ஆணையின்படி யும் கோவை மாநகரப் போக்கு வரத்துத் துணை ஆணையர் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆணையின் படியும் கோவை மாநகரக் கூடுதல் துணை ஆணையர் போக்கு வரத்து மற்றும் திட்டமிடல் மேற்பார்வையிலும் கோவை மாநகரப் போக்குவரத்துக் காவல் துறையின் உதவி ஆணையாளர் திருநாவுக்கரசு மற்றும் தமிழ்நாடு காவல் போக்குவரத்துக் காப்பாளர்கள் எஸ்.ரங்கபிரபு வழிகாட்டுதலின் படியும் நிர்வாக அலுவலர் சாம்பாபு ஆணையின் படியும் சாலைப் பாதுகாப்பு குறித்த சிறப்பு நிகழ்ச்சி நடை பெற்றது. இருநூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை அருகில் நின்று இந்நிகழ்ச்சியைப் பார்வை யிட்டனர்.
பார்வையாளர்களுக்கு விழிப்பு ணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.



